Sunday, 6 September 2015
சிவகங்கை மாமன்னர் உடையனத் தேவர்
சிவகங்கை சீமையின் முதல் கல்லூரி தென்மாவட்டங்களிலேயே மதுரைக்கு அடுத்ததாக தொடங்கப்பட்டது இங்குதான் தனது மக்களுக்காக இலவச கல்வி கொடுத்த கல்வி தந்தை
மாமன்னர் உடையனத் தேவர்
சிவகங்கை மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்த சுமார் 160 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மன்னர் உடையண மகராஜா அவர்களால் கட்டப்பட்ட மன்னர் மேனிலைப்பள்ளி.இப்பள்ளியில் படித்து பயனடைந்து இன்று புகழ்பெற்ற அமைச்சர்களாகவும்,மாவட்ட ஆட்சியாளராகவும்,நீதிபதிகளாகவும்,தொழில்அதிபர்களாகவும்,இன்னும் எண்ணற்ற துறைகளில் சிறந்து விளங்கிவருகின்றனர்.இப்படிபட்ட பள்ளியை உருவாக்கிதந்த மன்னர் உடையனமகராஜாவை எத்தனைபேருக்கு தெரியும்.
சிவகங்கையில் பல கோயில்கள் கட்டிய பெருமை இவரையே சேரும்.
சிவகங்கையில் பல கோயில்கள் கட்டிய பெருமை இவரையே சேரும்.
வாழ்க உடையண மகராஜா புகழ்!
வளர்க உடையண மகராஜா புகழ்!
வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர்
வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர்
வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்திய சுதந்திர வரலாற்றில் முதன்முதலில்
போரில் வீரமரணம் அடைந்தவர் அதே போல் போரில் தோற்கடிக்கப்படாத இந்திய மன்னரும்
இவரே வெற்றி அல்லது வீரமரணம் என்று வாழ்ந்தவர்தான் வீரப்பேரரசர்
முத்துவடுகநாதத் தேவர்

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் பற்றிய சில வரலாற்று துளிகள்
சிவகங்கை சீமையின் இரண்டாவது அரசராக 14-5-1750 அன்று முத்துவடுகநாதத் தேவர் முடிசூட்டப்பட்டார்.
முடிசூட்டப்பட்ட காலந்தொட்டு தம் நாட்டை மேன்மைப்படுத்துவதில் மிகுந்த கவணம் செலுத்தினார்.
தந்திரி தாண்டவராயன் பிள்ளையை பிரதானியாகவும் ஆலோசகராகவும் வைத்துக் கொண்டு ஆற்றல்மிகு அரசு புரிந்தார்.
சீமை எங்கும் செழிப்புற பல ஏரிகள்,குளங்கள், ஆற்றுக்கால்கள் அமைத்தார்.
ஆலங்யங்கள் பல கட்டினார் அவற்றில் முக்கியமானவை :
1) சேத்தூர் சந்திரசேகரர் கோவில்
2) காளையார்கோவில் சோமேஸ்வரர் கோவில்
3) காளையார்கோவில் பிரகார மண்டபம்
4) பட்டபங்கலம் அழகு சௌந்தரநாயகி அம்மன் கோவில்
5) திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
6) வடவன்பட்டி ஈஸ்வரன் கோவில்
7) பிரான்மலை பிடாரி அம்மன் கோவில்
8) பாகனேரி பில்வநாயகி அம்மன் கோவில்
9) சிவகங்கை சசிவர்ணேஸ்வரர் ஆலயம்
10) சிவகங்கை அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பித்தார்
மேலும் பல திருப்பணிகள் செய்தார்
மதுரையில் பூலித்தேவரின் நினைவு சின்னங்கள்
மதுரையில் பூலித்தேவரின் நினைவு சின்னங்கள் :-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த மதுரை அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு காக்கா தோப்பு அரண்மனையும், தக்க சண்மானமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியைவேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.
புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார்.

அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், காக்கா தோப்பு அரண்மனை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசலும், காக்கா தோப்பு அரண்மனையும் பூலித்தேவர் பெயர் சொல்லும் இடங்கள் - இனி அந்த இடங்களுக்கு போகும் போது நிச்சயம் பூலித்தேவர் நினைவு உங்களுக்கு வரும்...
-க.சந்தண கிருஷ்ணன்
Subscribe to:
Posts (Atom)