Sunday, 6 September 2015

மதுரையில் பூலித்தேவரின் நினைவு சின்னங்கள்

மதுரையில் பூலித்தேவரின் நினைவு சின்னங்கள் :-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த மதுரை அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு காக்கா தோப்பு அரண்மனையும், தக்க சண்மானமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியைவேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.
புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார்.
அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், காக்கா தோப்பு அரண்மனை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசலும், காக்கா தோப்பு அரண்மனையும் பூலித்தேவர் பெயர் சொல்லும் இடங்கள் - இனி அந்த இடங்களுக்கு போகும் போது நிச்சயம் பூலித்தேவர் நினைவு உங்களுக்கு வரும்...

-க.சந்தண கிருஷ்ணன்

No comments:

Post a Comment