Sunday, 6 September 2015

மறைக்கப்பட்ட மாமன்னர் சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர்

மறைக்கப்பட்ட மாமன்னர்

சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர்

ராணி வெள்ளச்சி நாச்சியார் அவர்களின் கனவர்

மருது சகோதரர்களுக்கு இவர் உடந்தையாக இருந்தார் என்று கூறி

மருது சகோதரர்களை தூக்கிலடப்பட்ட போது

இந்த மாமன்னரை மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்க்கு நாடு கடத்தினர் ஆங்கிலேயர்கள்
 —



காளையார்கோவில் சொர்னகாளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் வரலாறு

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்க்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றான காளையார்கோவில் சொர்னகாளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் வரலாறு

#நவசக்தி_ராஜகோபுரத்தின்_வரலாறு

1780ஆம் ஆண்டு வீரப்பேரரசி வேலு நாச்சியார் சீமையை மீட்ட பிறகு காளையார் கோவில் பாண்டிய மன்னர் கட்டிய கோபுரத்தின் அருகில் முத்துவடுகநாத தேவர் அவர்களின் நினைவாக சொர்னகாளிஸ்வரர் ஆலையத்தில் நவசக்தி ராஜகோபுரமும் அதன் கீழ் நூற்றங்கால் மண்டபத்தில் வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் திருவுருவச் சிலையையும் நிறுவ ஆனையிட்டார்.

அந்த வேலைகளை மருது சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார் மருது சகோதரர்களும் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் ஆனைக்கினங்க கடுமையாக உழைத்து நவசக்தி ராஜகோபுரத்தை கட்டினர்

1793ஆம் ஆண்டு ராஜகோபுரத்திற்க்கு குடமுழக்கு பூஜைகள் செய்து வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் அவர்களின் திருவுருவ சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து மக்கள் வெள்ளத்தில் காளையோர்கோவில் நவசக்தி ராஜகோபுரம் கீழ் உள்ள நூற்றங்கால் மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து நிறுவினர் 




சிவகங்கை சீமை மாமன்னர்

சிவகங்கை சீமை மாமன்னர் 

சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர் 

ராணி வெள்ளச்சி நாச்சியாரின் கனவர் 

வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் மருமகன்

7 அடி வேங்கை

புலிகளை வேட்டையாடும் மாமன்னன்


சிவகங்கை சீமை வரலாற்று தகவல் 1725 முதல் 1801 வரை

சிவகங்கை சீமை வரலாற்று தகவல் 1725 முதல் 1801 வரை 

1) சசிவர்ணத் தேவர் அகிலாண்டேஸ்வரி நாச்சியார் திருமணம் நடந்த ஆண்டு ?

1725

2)
சசிவர்ணத் தேவருக்கும் அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கும் முத்துவடுகநாதத் தேவர் பிறந்த ஆண்டு ?
1727

3) சசிவர்ணத் தேவர் சிவகங்கை சீமையை உருவாக்கி முதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?
1730

வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு ?

1730

4) முத்துவடுகநாதத் தேவருக்கும் வேலுநாச்சியாருக்கும் திருமணம் நடந்த ஆண்டு ?
1746

5) சசிவர்ணத் தேவர் மறைவுக்கு பிறகு முத்துவடுகநாதத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?
1750

6) முத்துவடுகநாதத் தேவருக்கும் வேலு நாச்சியாருக்கும் மகளாக வெள்ளச்சி நாச்சியார் பிறந்த ஆண்டு ?

1770

7) முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு போரில் வீரமரணம் அடைந்த ஆண்டு ? 
1772-06-25
8) இழந்த சிவகங்கை சீமையை வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து மீட்டு ராணியாக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?

1780

9) வெள்ளச்சி நாச்சியாரை இளவரசியாக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?

1780

10) சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் திருமணம் நடந்த ஆண்டு ?

1788

11) வேங்கை பெரிய உடையனத் தேவருக்கும் வெள்ளச்சி நாச்சியாருக்கும் பிறந்த பெண் குழந்தை பெயர் மற்றும் பிறந்த ஆண்டு ?

பர்வதவர்தினி நாச்சியார் 1790

12) வெள்ளச்சி நாச்சியார் மறைந்த ஆண்டு ?

1792


13) பர்வதவர்தினி நாச்சியார் மரணம் அடைந்த ஆண்டு ?
1793

14) வேங்கை பெரிய உடையனத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?

1793

15) வேலுநாச்சியார் காளையார்கோவில் நவசக்தி கோபுரத்திற்க்கு கும்பாபிஷேகம் நடத்திய ஆண்டு ?
1794

16) காளையார்கோவிலில் முத்துவடுகநாதத் தேவர் சிலையை நிறுவியவர் யார் ?
வேலுநாச்சியார்

17) வேலுநாச்சியார் மறைந்த ஆண்டு ?

1796-12-25

18) வேங்கை பெரிய உடையனத் தேவர் நாடு கடத்தப்பட்ட ஆண்டு ?
1801

19) படமாத்தூர் கவுரிவல்லபத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு 

06-07-1801

20) படமாததூர் கவுரிவல்லபத் தேவர் யார் ?

முத்துவடுகநாதத் தேவர் உடன் பங்காளி மைந்தர் வாரிசு



21) வேங்கை பெரிய உடையனத் தேவர்  மறைந்த ஆண்டு  ?

     19-09-1802 







தென்காசிப் பாண்டியர்கள் ( மறவர் )

தென்காசிப் பாண்டியர்கள் ( மறவர் )
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றும் நாளை இக்கோயில் இடிந்து விழும் என கணிக்கப்பட்டதாலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதை மீட்க உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை உலகம்மன் கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராக கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.

மகாராஜா திரு. T.N.S. தீர்த்தபதி

தென்னாட்டு புலி
சிங்கம்பட்டி சமஸ்தான
மகாராஜா திரு. T.N.S. தீர்த்தபதி

சிவகங்கை மாமன்னர் உடையனத் தேவர்

சிவகங்கை சீமையின் முதல் கல்லூரி தென்மாவட்டங்களிலேயே மதுரைக்கு அடுத்ததாக தொடங்கப்பட்டது இங்குதான் தனது மக்களுக்காக இலவச கல்வி கொடுத்த கல்வி தந்தை
மாமன்னர் உடையனத் தேவர்
சிவகங்கை மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்த சுமார் 160 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மன்னர் உடையண மகராஜா அவர்களால் கட்டப்பட்ட மன்னர் மேனிலைப்பள்ளி.இப்பள்ளியில் படித்து பயனடைந்து இன்று புகழ்பெற்ற அமைச்சர்களாகவும்,மாவட்ட ஆட்சியாளராகவும்,நீதிபதிகளாகவும்,தொழில்அதிபர்களாகவும்,இன்னும் எண்ணற்ற துறைகளில் சிறந்து விளங்கிவருகின்றனர்.இப்படிபட்ட பள்ளியை உருவாக்கிதந்த மன்னர் உடையனமகராஜாவை எத்தனைபேருக்கு தெரியும்.
சிவகங்கையில் பல கோயில்கள் கட்டிய பெருமை இவரையே சேரும்.
வாழ்க உடையண மகராஜா புகழ்!
வளர்க உடையண மகராஜா புகழ்!