Sunday, 6 September 2015

காளையார்கோவில் சொர்னகாளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் வரலாறு

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்க்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றான காளையார்கோவில் சொர்னகாளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் வரலாறு

#நவசக்தி_ராஜகோபுரத்தின்_வரலாறு

1780ஆம் ஆண்டு வீரப்பேரரசி வேலு நாச்சியார் சீமையை மீட்ட பிறகு காளையார் கோவில் பாண்டிய மன்னர் கட்டிய கோபுரத்தின் அருகில் முத்துவடுகநாத தேவர் அவர்களின் நினைவாக சொர்னகாளிஸ்வரர் ஆலையத்தில் நவசக்தி ராஜகோபுரமும் அதன் கீழ் நூற்றங்கால் மண்டபத்தில் வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் திருவுருவச் சிலையையும் நிறுவ ஆனையிட்டார்.

அந்த வேலைகளை மருது சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார் மருது சகோதரர்களும் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் ஆனைக்கினங்க கடுமையாக உழைத்து நவசக்தி ராஜகோபுரத்தை கட்டினர்

1793ஆம் ஆண்டு ராஜகோபுரத்திற்க்கு குடமுழக்கு பூஜைகள் செய்து வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் அவர்களின் திருவுருவ சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து மக்கள் வெள்ளத்தில் காளையோர்கோவில் நவசக்தி ராஜகோபுரம் கீழ் உள்ள நூற்றங்கால் மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து நிறுவினர் 




No comments:

Post a Comment