Saturday, 12 December 2015

"என்று அதர்மம் தலை தூக்குகிறதோ, அன்று நான் மீண்டும் அவதரிப்பேன்"

சிலர் பணத்தின் மீதும்,பதவியின் மீதும்,பெண்ணின் மீதும் மோகத்தில் இருந்த நாட்களில்,நான் தேசியத்தையும்,தெய்வீகத்தையும் காப்பாற்ற போராடிக்கொண்டு இருந்தேன்.

தொகுதிக்கு செல்லாமலே மக்களவை மாநிலங்களவை இரண்டிலும் ஜெயிக்கும் அளவு மக்கள் செல்வாக்கு இருந்த நான் பதவியை விரும்பியிருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன்.காங்கிரசுக்கு சாமரம் விசியிருந்தால் தமிழக தலைவர் ஆகியிருப்பேன்.

செல்வா சீமானாக பிறந்த நான் பெண்களை விரும்பியிருந்தால் நாள்தோறும் புதுவகையாக உல்லாசம் அனுபவித்திருப்பேன்.நான் எனக்காக எதுவும் செய்ததில்லை,என் செயல்பாடு எல்லாம் தேசத்திற்காக மட்டுமே.என் ஆன்மா ஆசைகள் துறந்து கட்டுப்படுத்தப்பட்டது,அது அழிவற்றது.

இந்த கலியுகத்தில் சிலர் பணத்திற்காக,பதவிக்காக என்னை தவறாக பயன்படுத்தலாம்,சிலர் என்னை அவமதிக்கலாம்,கவலை கொள்ளாதீர்கள்,நீங்கள் தேசத்தையும் தெய்வீகத்தையும் காப்பாற்ற போராடுங்கள்.

இந்திய விடுதலைக்கான போரின்போது,நேதாஜியுடன் சேர்ந்து வெறும் சில வார கால பயிற்சியுடன் வெள்ளை ராணுவம் மிரளும் வண்ணம் வீரத்துடன் போரிட்ட 5 லட்சம் தமிழர்களை இழந்தோம்.இழப்பு நமக்கு புதிதில்லை,இழப்பு நமக்கு பெரிதில்லை.போராடுங்கள்.

நீங்கள் ஏழையாக இருக்கலாம்,கிராமத்தானாக இருக்கலாம்,உங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம்,ஆட்சி,அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்,பயம் வேண்டாம்.தன்னலமற்ற உங்கள் போராட்டத்தில் என் அழிவில்லாத ஆன்மா உங்களுக்கு துணை நிற்கும்.


உங்களுக்கு எப்போது உதவி தேவையோ மனத்தால் என்னை அழையுங்கள்,உங்களுக்கான உதவி தேடி வரும்.நான் உங்களுடனே இருக்கிறேன்,என் குழந்தைகள் ஆகிய உங்களை என் முருகனின் நிழலில் அமர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கிறேன்.உங்கள் ஒவ்வொரு வெற்றியிலும் உடனிருப்பேன்.


"என்று அதர்மம் தலை தூக்குகிறதோ,
அன்று நான் மீண்டும் அவதரிப்பே
ன்"
-பசும்பொன் தேவர்.

No comments:

Post a Comment