Tuesday, 8 September 2015

சிவகிரி ஜமீன்-மறவர்கள்

சிவகிரி ஜமீன்-மறவர்கள்

முன்னுரை:
 
ஸ்விஸ் நாட்டின் வங்கியில் 2 லட்சம் கோடி ரூபாய் பனம் சிவகிரி ஜமின் கனக்கில் உள்ளதால் வாரிசுகள் நான் நீ என்று போட்டி போட்டு சண்டையில் இறங்க சென்ற வாரம் குமுதம் ரிப்போர்டர் சிங்கம்பட்டி ஜமிந்தார் சிவகிரியில் மறவர்களே பெரும்பான்மையக உள்ளர்கள்.அதை ஆண்டவர்களும் மறவர்களே என்று கூறியுள்ளதை இதலில் ப்ரசுரித்தோம்.உடனே வன்னியர் சங்கங்களின் தலைவர்களன முரளிநாயக்கர்,அன்னல் கண்டர் இதற்க்கு மறுப்பு தெரிவித்து அது வன்னியர் ஜமீன் என்று கூறினர். ஆனல் இதை அப்பட்டமக மறுக்கும் தற்போதய ஜமீன் வாரீசான ஜெகன்நாதன் மறவர் ஜமீன் தான் என்று கூறியுள்ளார் சிவகிரியில் மரபு ரீதியிலான புதிய சர்ச்சை வெடிதுள்ளது.
 

 
 
சிவகிரி ஜமீனை ஆண்டவர்கள் யார்?
 
இதற்கு பதில் இதை ஆண்டவர்கள் வன்னியர் பட்டம் உள்ள வன்னிய மறவர்கள் (அ)வன்னி கொத்து மறவர்கள். இவர்களை கன்னிகட்டி(தாலி வகை) மறவர்கள் என்றும் கூறுவர்.
எழயிரம்பன்னை,அழகபுரி,வேப்பங்குளம் யாவும் இதே வன்னி கொத்து மறவர்களே.
இது என்ன வன்ன்யர் ஒரு சாதி மறவர் ஒரு சாதி அது எப்படி மறவர்களுக்கு வன்னியர் பட்டம் என்ற கேள்வி எழும். மறவர்களுக்கு வேறு பட்டம் உண்டா? என்றால் உண்டு.கொல்லம்கொண்டான் ஜமீனுக்க் வாண்டாயத் தேவர்,கங்கைகொண்டான் சேத்துர் ஜமீனுக்கு சோழகத் தேவர் என்ற பட்டம் உண்டு. இவ்விருவரும் வனங்கமுடி பண்டார மறவர் என்ற உட்பிரிவை சேந்தவர்கள்,(வாண்டயார்,சோழகர் என்ற பட்டம் கள்ளர் பெருமக்களுக்கு உண்டு.இலங்கையில் உள்ள் வல்வெட்டிதுறை மறவர்களுக்கு வாண்டையார் பட்டம் உண்டு).
திருநெல்வேலியில் 20-ஆம் நூற்றாண்டில் எடுத்த சாதிக் கனக்கெடுப்பில் வெள்ளாளர் (அ) பிள்ளை 33,975
வன்னியர் (அ) மறவர் 47,945 சாணார் 13,313 கோனார் 12,395 பிராமின் 10,791 பறையர் 13,456 என கனக்கெடுத்துள்ளனர். திருநெல்வேலி ஜாதிய அறிக்கை இது.இதில் “பள்ளி” என்னும் சாதி கிடையாது.
இது என்ன குழப்பம் என்ர்ற கேள்விக்கு மறவர்க் குலத்தில் 38 பிரிவுகள் உண்டு அவை.
நாட்டார், மணியக்காரர், காரணர், தோலர், பண்டாரம், வேடங்கொண்டான், செட்டி, குறிச்சி,
வேம்பன் கோட்டை, செம்பிநாடு குன்றமான்நாடு, இராமன்நாடு, ஆப்பன் நாடு,
கொங்கணர், அம்பொனேரி, வல்லம்பர், இவுளி, வன்னியர், கிள்ளை, ஏரியூர்,
வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிகை, தும்பை, உப்புக்காடு, அஞ்சு கொடுத்தது,
கொண்டையன் கோட்டை, தொண்டை நாடு, சிறுதாலி, பெருந்தாலி, பாசி கட்டி, கன்னி
கட்டி, கயிறு கட்டி, அணி நிலக்கோட்டை.
இவைகலின் ஒன்றே வன்னியர் என்ற உட்பிரிவுகளாவர். இவர்களை பற்றி”Nicoles dirkes,’The hollow ethenic crown of indian kingdom’” என்ற நூலில் வன்னி மறவர்கலின் வம்சாவளியை பற்றி குறிபிட்டுள்ளர் அது.Both vanniya maravars of tirunelveli.See alakapuri zamindar vamsavali and citampara vanniyan of elayiram pannai vamsavalli GOML,. Madras
இன்றைய சூழ்நிலையில் பல்வேரு சாதியினர் தம்மை உயர்த்திக்கொள்வதற்காக தம் சங்கங்களின் மூலம் பன உதவிகள் புரிந்து சாதிக்கெனவே தனிதனியாக தொல் பொருள் ஆய்வாளர்களை உருவக்கி அவர்கள் மூலம் புதிது புதிதக செப்பு பட்டயம் கல்வெட்டு கண்டறிந்த்தகவும் வரலாற்றுகளை திரித்து பொய்யுரைபவர்களை கொண்டு உலவ விட்டுருகின்றன. சில சாதிகளின் பொருளாதர பலம் இந்த மாநிலதை ஆள்பவரே வைத்தே தம்மை அரச வாரிசுகள் என்ற அறிவிக்க்ன்ற சூழ்நிலை நாம் காட்டும் ஆதாரங்கள் அப்படி புரட்டர்களால் உருவக்கபட்டவை அல்ல..
அவை நம்மீது படையெடுத்து பாளயங்களை அழித்து,பகுதிகளை ஜப்தி செய்து, வரிவசூல் செய்த ஆங்கில தளபதிகளலும் பல ஆட்சியாள்ர்களாலும்,மாவட்ட கலைக்டர்களாலும் அரசாங்கத்தில் 250 வருடங்களுக்கு மேல் ஆவணாமாக இருப்பவை. அவைகளின் கூற்றை இங்கு நாம் எடுத்து காட்டியுள்ளோம்.

சிவகிரி ஜமீனின் தோற்றம்:
சிவகிரி ஜமீனின் மூததையர்களாக புரசாம்பட்டு வன்னியாடியும், தச கண்ட வன்னியனாரும் பழைய மறவர் சீமையான இரமனாதபுரம் சீமையில் சிவகங்கை பகுதியில் உள்ள் திருப்புவனம் பகுதியே பூர்வீகமாகும். இதில் புரசாம்பட்டு வன்னியடி பாண்டிய மன்னனிடம் தளபதியாக இருந்துள்ளர். இவர் சோழ மன்ன்வ்னான் மூன்றாம் ராஜேந்திரனை வெல்ல் கார்ன்மாக இருந்த காரனத்தால் 72 ஊர்களின் திசை காவலனாக் வழங்கினார் .இவரதி பூர்வீகம் தொண்டை மண்டலமோ(அ) காவிரியின் வடகரையோ கிடையாது. இதன் பின் தன் சுற்றத்தாரை அழைத்து சென்று எழாயிரம் பன்னை,அழகபுரி போன்ற பகுதியில் குடியேறினர்.இவரும் சேத்துர் ஜமீனும் சம காலதவர்கள். ஆதவது 13-நூற்றண்டு.

வன்னியர்-பட்டம் பற்றிய சில தெளிவுகள்:

வன்னியர் எனற பெயரின் விளக்கதில்
வன்னி – கிளி,தீ, குதிரை, மர வகை,தலைவன், சிங்கம் என்று பல பொருள் தருகிறது எனவே இவை அனைதும் ஒரு சாதிக்கு பொருந்தும் என எற்கலாகது.
வன்னியன் என்னும் சொல்லின் பொருள் வன்மை என்ற வேர் சொல்லின் ஊருவனது என்பதே உன்மை.
தின்னிய நெஞ்சம் உள்ளவன் தின்னியன். வன்மையுடை நெஞ்சம் உள்ளவன் வன்னியன்.
வன்னியர் என்பது ஜாதி பெயரல்ல என்று தெளிவாக தெரிகிறது பட்டமே




வன்னியர் என்ற பட்டம் எந்த எந்த ஜாதியனர்க்கு உள்ளது என்று பார்போம்.

1.ஈசனாட்டு கள்ள்ர்(மத்திய அமைச்சர் பழனி மானிக்கம் வன்னியர்)
2.வலைய முத்தரையர்(வழுவாடி வன்னியர்)
3.வன்னிகொத்து மறவர்(வன்னியர்,வன்னியடி மறவர்)
4.ஆர்க்காடு அகமுடையர்(வன்னிய முதலியார்)
5.துளுவ,கொங்கு வெள்ளலள்ர்(வன்னியர்கவுண்டர்)
6.பார்க்கவ குலத்தார்(வன்னிய மூப்பனார்)
7.பரவர்,கரையர்(வன்னியர்)

 
என பல்வேறு சமூகதினருக்கு இருக்கிறது. அப்போது இவர்கள் கோர காரனம்.

அப்போது வன்னியர் என்று தற்காலத்தில் உள்ள சாதியர் யார்?
 
இதறகு ஆதார்பூர்வமாக தொண்டை மண்டலதின் மிரஸ் ரேட் கல்வெட்டு சொல்லும் குடிமக்களாய் கூறும் செய்தி:
“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”

இதில் இன்று தொண்டை மண்டலதில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் என்ற ஜாதி பற்றி குறிப்பிடவில்லை.
அதற்க்கு பதிலாக பள்ளி என்ற ஜாதியை பற்றி குறிபிடுகின்ர்ற்ர்.
இப்ப்ள்ளி என்ற இவ்வினமே பிற்காலதில் வன்னியர் என்று 1891 தமிழ்நாடில் கெஜட்டில் மாற்றம் செய்து கொண்டார்கள்.
பள்ளி என்ற வார்தைக்கு அர்ததம் பாட சாலை,கோயில்,குறும்பர் என்ற அர்ததம்(சுராவின் தமிழ் அகராதி). ஆம் குறும்பர் என்ற இனத்தின் வேறு பெயரே பள்ளி.


குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.

குறும்பர் அல்லது குறுமனர் அல்லது குறுபாரு (Kurumbar or Kurumans or Kurubaru) தென்னிந்தியாவில் வாழும் ஆடு மேய்ப்பவர்களாவர். இந்தியாவின்பழங்குடியினர் ஆவர். இவர்கள் பல பெயர்களில் அறியப்பட்டாலும் அவை ஒரே பொருளைக் குறிப்பவை. இவர்களது மொழி குருமன் பழங்குடிகன்னடம் ஆகும். இவர்களது கடவுளாக வீரபத்திரரை (பீரா தேவரு) வழிபடுகின்றனர். தங்களது தலையில் தேங்காய் உடைத்து கடவுளை வழிபடுகின்றனர். இவர்களது சாதிப்பெயர்கள் கவுண்டர், கௌடர், ஹெக்கடே, நாய்க்கர் என்பன ஆகும்.இந்தியாவின் பிற பகுதிகளில் இவர்கள்தங்கர் என அறியப்படுகின்றனர். குறும்பர்களின் தெய்வமான் வீரபத்திரரை தான் “அக்னி வீர பத்திரர்” என்றும் கூறுவர்.வன்னியர்(பள்ளி)களின் மூததாதையரக “ருத்திர வீர வன்னியர்” என்கிறர்கள்.
வன்னியர்-அக்னி
பத்திரர்-ருத்திரர்.
இரண்டும் ஒன்றே. “அக்னி வீர பத்திரர்” என்ற சொற்றொடரின் எதிர் சொற்றொடரே “ருத்திர வீர வன்னியர்”.குறும்பர் இனமே வன்னியர்(பள்ளி) ஆகும்.அக்னி வீரபத்திரரை வழிபடுவதால் தம்மை அக்னி குலதவர் என்று கூறுகிறர்.அக்னி வீரபத்திர் வழிபாடு வன்னியர்(பள்ளி) உள்ள தர்மபுரி,சேலம் மாவட்டங்களில் கானபடுகின்றனர்.


குறும்பர் முல்லை நிலத்தில் வாழ்ந்த குடி மக்கள் ஆவர்.ஆதனால் காடவர் குறும்பர் என்று கூறுவர்.குறும்பர் தொண்டை மண்டலதை ஆண்ட போர் குடியினர் ஆவர்.தொண்டை மண்டலமே குரும்பர் நாடு என்ற அழைக்கபட்டுள்ள்து. பின்பு.கார்வேள் என்ற கன்னட நாட்டை சேர்ந்த வெள்ளாலரல் வெல்லபட்டு அதிகாரதை இழந்தனர்.
காடவ குறும்பர்——>வனப்பள்ளி—–>பள்ளி——>வனயர்————>வன்யர்—–>வன்னியர்

காடவர் என்ற காரனபெயர்தான் வனயரகி பின்பு வன்னியர் என்று திரிந்துள்ளது.
இக்குலத்தவர்கள் 16ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பொதுவாக வன்னியர்கள் என்ற சாதிப் பெயரால் அழைக்கப்படலாயினர். இவர்களுக்கும் வன்னியர் என்ற சாதிப்பட்டம் புனையும் கள்ளர் குலப் பிரிவினருக்கும் அதுவரை தொடர்பு ஏதுமில்லை.
கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய, சென்னை பாடியிலுள்ள திருவலிதாயம் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள, இரண்டாம் தேவராயர் கல்வெட்டில் விஜயநகர அரச அலுவலர்களான வன்னியர்கள், அவ்வூர்ப் பள்ளி குலத்தவர்க்குச் சில சலுகைகள் வழங்கிய செய்தி பதிவாகியுள்ளது.
 வன்னிகொத்து மறவர்கள் பற்றிய பல ஆதாரங்கள்:

“Th kingship and political practise the colonial of india”72 பளையக்கரர்க்ளால் வெல்ல முடியாதவரும் சிவகங்கை,புதுக்கோட்டை,தஞ்சவுர் 14 நாட்டு தலைவர்களும் பாஞ்சலங்குரிச்சி,காடல்குடி தலைவர்களால் வனங்குதர்குறியவரான சேதுபதியேகொண்டயங்கோட்டை,வன்னிய,வனங்கமுடி தலைவர்களை போற்றுதல் குரிய உட்பிரிவுகளாக(subsects) மறவர் குலத்தில் விளங்கினர்.இதில் இருந்து வன்னியர் என்பது மறவரில் ஒரு உட்பிரிவு என்று தெறிகிறது. An eighteenth century document of Maravar Caste codes relates that ,at setupati royal assembly ,Kontaiyakottai and Vanniya Subcastes held a superior status among Maravar chiefs
இதே போல் தென் இந்திய அரச வம்சத்தை ஆறாய்ந்த ச.ரா.கதிர்வேலு தம் நூலில் சிவகிரி ஆண்டவர்கள் வன்னியர் பட்டம் உள்ள வன்னிய மறவர்கள் (அ)வன்னி கொத்து மறவர்கள். இவர்களை கன்னிகட்டி(தாலி வகை) மறவர்கள் என்றும் கூறுவர். எழயிரம்பன்னை,அழகபுரி,வேப்பங்குளம் யாவும் இதே வன்னி கொத்து மறவர்களே. ”The history of tirunelveli”கnல்டுவெல் திருநெல்வெலி மானுவலில் ஸ்டுவர்ட் “திருநெல்வெலி உள்ள மறவர் (அ) வன்னியன்என்ற ஜாதி மிகவும் அதிசயமானது பாளயக்கரர்களில் அநேகர் இவ்வகுப்பை சார்ந்தவர் 18,19 நூற்றண்டில் ஆங்கிலெயருடன் சண்டையிட்டனர்.
அதே நூலில் “வன்னிய மறவர்-நாடார் மோதல்” என கழுகுமலை கலவரதை பற்றி கூறுகிரர்.


 
சேர,சோழ,பாண்டிய,பல்லவ,சாளுக்க்,வேளிர்,ரஷ்டிரகூட இனமாக அடயால படுத்த விரும்புகின்றர். அதற்கு வன்னியர் என பெயரில் வரும் அனைவரையும் கோறுகின்றனர்.அவர்கள் சிவகிரியையும் தம்முடையது என கோறும் ஆதரங்களில் ஒன்று “வன்னியர்”
என்ற பெயரையும் மற்றொன்று பழனியில்

///உள்ள ஸ்ரீ வீரமாத்தி ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் கிடைத்த அறிக்கை மடல் 1944 ஆம் ஆண்டு மே திங்கள் முத்திரையிட பெற்றுள்ளது . இவ்வறிக்கை ஏட்டில் ரிஷிஸ்வர சுவாமி என்றும் லோக குருசாமி என்றும் குறிப்பிடப்படுபவர் வன்னிய குல மரபினர் என்பதை அறிக  என்று ‘வன்னிய பெருங்குலம்’ நூலாசிரியர் திரு. காவிரி நாடன், அந்நூலில் பக்கம் 36 இல் குறிப்பிட்டிருக்கிறார்.

அங்கு கிடைத்த இரண்டாம் அறிக்கையில் அந்த “லோக குருசாமி” 255 வது பட்டம் ஏற்றவர் என்றும் சிவகிரி பிரம்ம க்ஷத்ரிய அக்கினி வன்னிய ராஜ அரசர் பழனிமலை பரம அருட்… மகா பண்டார சந்நிதானம் சிவகிரி பாண்டிய மகாராஜா என்று பரம்பரை பட்டத்து பெயர் வைத்து விளங்கி வருகின்ற சிவபெருமான் திருவருள் பழனிமலை தண்டாயுதபாணி பொன்னம்பல கைலாச போகனாத ஞானதேசிகேஸ்வர மஹா மஹேஸ்வர சுவாமி அவர்களாகிய 133 வயதுள்ள மஹா கையிலாச தெண்டாயுத பாணி மஹா ராஜா குரு மஹா ராஜ ரிஷிஸ்வர சுவாமி அவர்கள் என்று எழுதப்பட்டிருகிறது.
இவ்வறிக்கை மூலம் கி பி 1944 வாக்கில் சிவகிரி சமீனை சேர்ந்த அரச பரம்பரையினரில் ஒருவர் பழனிமலை மஹா பண்டார சந்நிதானமாக  பட்டம் எற்றுருக்கிறார் என்று தெரிகிறது.
////////


இதில் இருந்து இது எவ்வளவு பிழையான புரிதல் என்று தெறிகிறது. இதில் சிவகிரி ஜமீனை சேர்ந்த மஹராஜ ஒருவர் பண்டாரமாக உள்ளர் என கூறுகிரர்கள்.முதலில் அவர்களுக்கு பழனி மலை வரலாறு தெரியாது என்று தோன்றுகிறது.இடும்பன் என்ற அரக்கன் 2 மலைகலை காவடியாக கொண்டு வருகையில் முருகன் அவனை வென்று பழனி மலை காவலனாக்கினர்.கோயில் இருக்கும் இடம் பழனிமலை(சிவகிரி) அருகில் இருக்கும் இடும்பமலை(சக்திகிரி).பழனிமலை குன்றின் பழைய பெயர்(சிவகிரி)-பழனி தல வரலாறு.அவர் பள்ளி இனத்தவர்தான் ஆனால் சிவகிரி ஜமீன் அல்ல பொதுவாக பனடார மடதிபதிகளும்,ஆதீன சாமியார்களும் மஹராஜ் என்ற பட்டம் போட்டு கொள்வார்கள் அதற்காக அவர்கள் ராஜா அல்ல.இத்ல் வரும் உனமை செய்தி இது தான் ” பழனி மலைகுன்று(சிவகிரி) பண்டாரம்” ஆவர்.(சிவகிரி -பழனிமலை குன்று)மற்றபடி சிவகிரி ஜமீந்தாருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையது 
இச்சர்சைக்கு முற்றுபுள்ளி வைதுள்ளார் தற்போதய வாரிசு ஜெகன்நாதன் அவர் குமுதம் ரிப்பொர்டார்-ல் அளித்துள்ளபேட்டியில் “எங்களை வன்னிய குல சத்திரியர்” என்கிறனர் அது மறவரில் ஒரு பிரிவே அன்றி (பள்ளி) இனம் அல்ல.எங்கள் சம்பந்தம் அனைத்தும் மறவர் ஜமீங்களுடன் தான்.சில ஜமீந்தார்களுக்கு வாரிசு இல்லாத காரனத்தால் வன்னியர் ஜமீன் என்று கூறுகின்ற்னர்.உன்மை என்னவெனில் முக்குலத்தோர் இனத்தில் தர்போது தான் 20 வருடமாக ஒருவருக்குள் சம்பந்தம் செய்கின்றனர்.அதற்கு முன்பு முக்குல்த்தோரிலே கிடையாது எனில் மறவர் சமூகம் எனில் இது எப்பொதுமே கிடையாது.அதுவும் ஜமீனில் வேறு சமூகம் எனில் நினைத்து கூட பார்க்க முடியாது.
ஆனால் தென் பாளயையட்டு(மறவர்கள்) அனைவரும் உறவினர்களே. தற்போதய வாரிசு ஜெகன்நாதன் அவர்கள் தாயார்(சிங்கம்பட்டி ஜமீனை சார்ந்தவர்). இவர் அன்னியாரும் தற்போதய ரானியாரான் பாலகுமாரி நாச்சியார் சேத்துர் ஜமீனை சார்ந்தவர். தற்போதைய தலைவண்கோட்டை,சேத்துர் ரானியார்கள்(சிவகிரி ஜமீனை சார்ந்தவர்களாவர்).
“இன்னொரு ஆதாரத்தில் கருப்பயி நச்சியார் என்ற “சின்ன தம்பியார்” மேல அரன்மனை சத்திரிய வன்னியர் அரன்மனையை சார்ந்தது”.இதுவும் தவ்றுதலான புரிதலே.அரன்மனை “சத்திரிய வன்னியர்” என்பது “வன்னியனார்”(அ)”வன்னிய ராஜன்” என்ற பட்டத்தை குறிக்குமே தவிர “பள்ளி” (அ) “வன்னிய குல சத்திரியர்” என்ற இனத்தை குறிக்காது.பொதுவாக அரன்மனையோ நிலமோ பாண்டியனை சார்ந்தது,தொண்டைமானை சார்ந்தது,சேதுபதியை சார்ந்த்து என்று பட்டதை குறித்துவருமே தவிர சமூகத்தை குறிக்காது
நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

எதோ நன்பர் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன் வன்னியபட்டம் உள்ளதா என்று கேட்டுள்ளார்.

அதலையூர் நாடாள்வான் = விஜயாலத்தேவன் = வன்னியநார் அடைக்கலம் காத்த சூரைக்குடி அரையன்.
நாடாள்வான் விஜயாலயத்தேவன்
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219) 

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம் 

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்………………………. 



கி.பி.1424



“வன்னிநார் அடைக்கலம் காத்த விஜயாலத்தேவன்”


The Poligar of sivagiri: “Barakatulla and nabikan kattak set off from nellitangaville with 500 horse,leaving mahfuz khan with the puli devar. Skirting along poligar Vaniah of shevagherry[“Vaniah” stands here for Vannia, the caste name or title of a branch of the Marava caste, to which the sivagiri belonged. The Elayiram pannai Poligar also a vanniya. 
வன்னியர் சங்கத்தினர் "வன்னியர்" என்ற பெயரை மட்டும் வைத்து கோறுகிறார்களே இவற்களால் "பள்ளி என்றும் படையாட்சி" என்று கோற் முடியுமா.இன்னும் எத்தனை நாள் இந்த போர்வையில் வரலாறை சொந்தம் கொண்டாட முடியும்!இன்னும் சொல்லபோனால் இவர்களுக்கு வன்னியர் என்பது சாதி பெயர் தானே ஒழிய வன்னியர் என்ற பட்டம் இவர்களுக்கே கிடையாது.இவர்களோ படையச்சி,கவுண்டர்,கவுடா,நாயக்கர்,ரெட்டி,ராவ்,.. என்றுதான் பட்டம் சூடுகிரர்கள்.
இறுதியாக காட்டும் ஆதாரம் ஒன்றே ஓன்று.

திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
 
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது.......வெங்கல ராச வடுக படை.....
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை...
...பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்
இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.

undefined

(History of tirunelveli by robert caldwell bishop) Most Marava palaiyams were contiguous units at the foot of the Eastern Ghats and were collectively known as the Western Bloc. Nayaka palaiyams (mostly in eastern Tirunelveli, Dindigul, and Coimbatore) constituted the so-called Eastern Bloc.only Marava and Nayaka have the paliyams in Tirunelveli. Each polegar “concentrated in his hands the exchange of money and the traffic of every merchantable article that was produced within the pollam’s limits. He also possessed the sole exercise of judicial authority, both civil and criminal, in the fullest extent.” “In areas of Marava and Vaduga [Telegu-speakers] settlement concentration, specific chiefs were recognized as the official heads of territorial segments of the [Nayaka] state. The largest of these palaiyakkarar domains … were those of Ettaiyapuram, Chokkampatti, Panchalamkurichi and Sivagiri.”

மறவர்கள் பாளயம்கள் அனைத்தும் நெல்லை மேற்கு தொடர்ச்சி மழைதொடரில் அமைக்கபட்டு இருக்கும் இதம் பெயர்(மேகாடு).நாயக்கர் பாளயம்கள் அனைத்தும் நெல்லை கிழக்கில் அமைக்கபட்டு இருக்கும் இதம் பெயர்(கீகாடு). 

மறவரையும் நாயக்கரையும் தவிர வேறு யாருக்கும் மதுரைக்கு தெற்கு பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை யாருக்கும் பாளையம்கள் கிடையாது. மறவர் பாளயபட்டுகளின் வம்சங்களும் அதன் உட்பிரிவுகளும்:

நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராƒபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன.
ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் . உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். கொல்லம்கொண்டான்,கங்கைகொண்டான் மற்றும் சேத்துர் முதலிய மூன்று பாளயம்கள் வனங்காமுடி பண்டார மறவர். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்ட வன்னிகொத்து மறவர்கள் இவர்க்ள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.

மறவர் ஜமீன்கள்(திருநெல்வேலி)
———————————————-
1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார்
2. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்
8. தெங்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவ ராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்த்ர தலைவனர்(அ) ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார்
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
—————————————————-

மறவர் சமஸ்தனங்கள்
*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
———————————

மறவர் ஜமீன்கள்(ராமநதபுரம்)
————————————————
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்


ஆய்வுக்கான நோக்கம்: 
மற்றவர் பெருமையை அபகரித்து, போலி பெருமை தேடும் அளவுக்கு எங்கள்(முக்குலத்தோர்) சமூகம் இல்லை. ஏனெனில் எங்களுக்குள்ள வரலாற்றுப் பெருமைகள் வேறு எவருக்கும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. அதற்காக எங்கள் பெருமைகளில் ஒன்று திருடப்பட்டால் நமக்குத்தான் வேறு பல பெருமைகள் உள்ளனவே, இது ஒன்று போனால் போகட்டும் என்று விட்டு விட முடியாது. கூடாது. விட்டு விடுவது அல்லது விட்டுக் கொடுப்பது எங்களுக்குப் பெருமை தாராது. எங்கள் புகழ் அனைத்தையும் பேணிக்காக்கும் கடமையும், உரிமையும் எங்களுக்கு உண்டு.

வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”

 


தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.


ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.


வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.


தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.


“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.


தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு – செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.


1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.


சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.


விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.


மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.


அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….


நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….


மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….


ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….
நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.

புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18.

Monday, 7 September 2015

மாமன்னர் கௌரிவல்லபத்தேவர்

மாமன்னர் கௌரிவல்லபத்தேவர்


சிவகங்கை சீமை துப்பாக்கி கவுண்டர்

சிவகங்கை சீமையின் மாமன்னர் கௌரிவல்லபத்தேவரின்

உண்மையான ராஜ விசுவாசி துப்பாக்கி கவுண்டர்.


மாமன்னர் பூலித்தேவர் வெற்றி கண்ட போர்கள்

மாமன்னர் பூலித்தேவர் வெற்றி கண்ட போர்கள் 

1.இராபர்ட்கிளைவ் போர் _திருச்சி _1750,

 2.மாபூஸ்கான் போர் _களக்காடு_1755, 

3.ஹெரான் போர் _நெற்கட்டான்செவல்_1755, 

4.களக்காடு போர்_1755, 

5.திருவில்லிபுத்தூர் போர்_1756, 

6.திருநெல்வேலி போர்_1756, 

7.கான்சாகிபு போர்_ஆழ்வார்குறிச்சி_1757, 

8.கான்சாகிபு போர்_ நெற்கட்டான்செவல_ 1759,

 9.கான்சாகிபு போர்_ வாசுதேவநல்லூர் _1759, 

10.கான்சாகிபு போர் _வாசுதேவநல்லூர்_1760, 

11.கான்சாகிபு போர்_ வாசுதேவநல்லூர்_1761. 

12.டெனால்டு காம்பல் போர்_ வாசுதேவநல்லூர்_ 1767  மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவநல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர்.அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர்.ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார்.தப்பி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மறைந்து கொண்டார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.

 தொடர்ந்து 17ஆண்டுகளுக்கு மேல் போர் புரிந்த மாவீரர் பூலித்தேவர்

 மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.






























Sunday, 6 September 2015

சிவகங்கை சீமை கல்வெட்டு


மாமன்னர் முத்துவடுகநாதத் தேவர்

வீரத்தாய் வேலுநாச்சியார்

கல்வெட்டு

-சிவகங்கை சீமை




சிவகங்கை சீமை மன்னர்கள்

சிவகங்கை சீமையை உருவாக்கிய

மாமன்னர் சசிவர்னத் தேவர்

அவரது வாரிசு 

மாமன்னர் முத்துவடுகநாத தேவர்

அவரது மருமகன்

மாமன்னர் வேங்கை பெரிய உடையனத் தேவர்



ராணி வேலுநாச்சியார் விருப்பாச்சி அரண்மனையில் தங்கியிருந்த பொழுது

ராணி வேலுநாச்சியார் விருப்பாச்சி அரண்மனையில் தங்கியிருந்த பொழுது அங்கு நடக்கும் போர்பயிற்சி களத்தை பார்வையிடும் வழக்கம் உண்டு ஒருமுறை பார்வையிடச்சென்ற பொழுது ஹைதர் அலியின் படைத்தளபதி ராணியைப்பார்த்து ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சண்டையிட்ட முடியுமா என்ற கேட்ட பொழுது சிறிதும் அசராமல் அங்கிருந்த வாளை கொடுத்து நீங்கள் வீரமறவனாக இருந்தால் என்னிடம் சண்டையிட்டு வெல்லுங்கள் என்று கூறினார்.நீங்கள் வாளை வலது கையிலே பிடித்துக்கொள்ளுங்கள்,நான்எனது இடது கையிலே பிடித்துக்கொண்டு சண்டையிடுகிறேன் முடிந்தால் இந்த வீரமறத்தியை வென்றுகாட்டுங்கள் என்று கூறி சண்டையிடுகிறார்.கனநேரத்தில் படைத்தளபதியை வீழ்த்தி கழுத்தில் வாளை வைத்தார்.அதிர்ந்து போன படைத்தளபதி மன்னித்துவிடுங்கள் அன்னையை எனக் கூறினார்.இதைப்பார்த்து வியர்ந்து போன ஹைதர் அலி வேலுநாச்சியாருக்கு போரிட 5000 படைவீரர்கள் தருவதாக உறுதியளித்தார்.

மறைக்கப்பட்ட மாமன்னர் சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர்

மறைக்கப்பட்ட மாமன்னர்

சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர்

ராணி வெள்ளச்சி நாச்சியார் அவர்களின் கனவர்

மருது சகோதரர்களுக்கு இவர் உடந்தையாக இருந்தார் என்று கூறி

மருது சகோதரர்களை தூக்கிலடப்பட்ட போது

இந்த மாமன்னரை மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்க்கு நாடு கடத்தினர் ஆங்கிலேயர்கள்
 —



காளையார்கோவில் சொர்னகாளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் வரலாறு

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்க்கு உட்பட்ட கோவில்களில் ஒன்றான காளையார்கோவில் சொர்னகாளீஸ்வரர் கோவில் கோபுரங்கள் வரலாறு

#நவசக்தி_ராஜகோபுரத்தின்_வரலாறு

1780ஆம் ஆண்டு வீரப்பேரரசி வேலு நாச்சியார் சீமையை மீட்ட பிறகு காளையார் கோவில் பாண்டிய மன்னர் கட்டிய கோபுரத்தின் அருகில் முத்துவடுகநாத தேவர் அவர்களின் நினைவாக சொர்னகாளிஸ்வரர் ஆலையத்தில் நவசக்தி ராஜகோபுரமும் அதன் கீழ் நூற்றங்கால் மண்டபத்தில் வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் திருவுருவச் சிலையையும் நிறுவ ஆனையிட்டார்.

அந்த வேலைகளை மருது சகோதரர்கள் வசம் ஒப்படைத்தார் மருது சகோதரர்களும் வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் ஆனைக்கினங்க கடுமையாக உழைத்து நவசக்தி ராஜகோபுரத்தை கட்டினர்

1793ஆம் ஆண்டு ராஜகோபுரத்திற்க்கு குடமுழக்கு பூஜைகள் செய்து வீரப்பேரரசர் முத்துவடுகநாத தேவர் அவர்களின் திருவுருவ சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து மக்கள் வெள்ளத்தில் காளையோர்கோவில் நவசக்தி ராஜகோபுரம் கீழ் உள்ள நூற்றங்கால் மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து நிறுவினர் 




சிவகங்கை சீமை மாமன்னர்

சிவகங்கை சீமை மாமன்னர் 

சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர் 

ராணி வெள்ளச்சி நாச்சியாரின் கனவர் 

வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் மருமகன்

7 அடி வேங்கை

புலிகளை வேட்டையாடும் மாமன்னன்


சிவகங்கை சீமை வரலாற்று தகவல் 1725 முதல் 1801 வரை

சிவகங்கை சீமை வரலாற்று தகவல் 1725 முதல் 1801 வரை 

1) சசிவர்ணத் தேவர் அகிலாண்டேஸ்வரி நாச்சியார் திருமணம் நடந்த ஆண்டு ?

1725

2)
சசிவர்ணத் தேவருக்கும் அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கும் முத்துவடுகநாதத் தேவர் பிறந்த ஆண்டு ?
1727

3) சசிவர்ணத் தேவர் சிவகங்கை சீமையை உருவாக்கி முதல் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?
1730

வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு ?

1730

4) முத்துவடுகநாதத் தேவருக்கும் வேலுநாச்சியாருக்கும் திருமணம் நடந்த ஆண்டு ?
1746

5) சசிவர்ணத் தேவர் மறைவுக்கு பிறகு முத்துவடுகநாதத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?
1750

6) முத்துவடுகநாதத் தேவருக்கும் வேலு நாச்சியாருக்கும் மகளாக வெள்ளச்சி நாச்சியார் பிறந்த ஆண்டு ?

1770

7) முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு போரில் வீரமரணம் அடைந்த ஆண்டு ? 
1772-06-25
8) இழந்த சிவகங்கை சீமையை வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து மீட்டு ராணியாக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?

1780

9) வெள்ளச்சி நாச்சியாரை இளவரசியாக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?

1780

10) சக்கந்தி வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் திருமணம் நடந்த ஆண்டு ?

1788

11) வேங்கை பெரிய உடையனத் தேவருக்கும் வெள்ளச்சி நாச்சியாருக்கும் பிறந்த பெண் குழந்தை பெயர் மற்றும் பிறந்த ஆண்டு ?

பர்வதவர்தினி நாச்சியார் 1790

12) வெள்ளச்சி நாச்சியார் மறைந்த ஆண்டு ?

1792


13) பர்வதவர்தினி நாச்சியார் மரணம் அடைந்த ஆண்டு ?
1793

14) வேங்கை பெரிய உடையனத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு ?

1793

15) வேலுநாச்சியார் காளையார்கோவில் நவசக்தி கோபுரத்திற்க்கு கும்பாபிஷேகம் நடத்திய ஆண்டு ?
1794

16) காளையார்கோவிலில் முத்துவடுகநாதத் தேவர் சிலையை நிறுவியவர் யார் ?
வேலுநாச்சியார்

17) வேலுநாச்சியார் மறைந்த ஆண்டு ?

1796-12-25

18) வேங்கை பெரிய உடையனத் தேவர் நாடு கடத்தப்பட்ட ஆண்டு ?
1801

19) படமாத்தூர் கவுரிவல்லபத் தேவர் மன்னராக முடிசூட்டப்பட்ட ஆண்டு 

06-07-1801

20) படமாததூர் கவுரிவல்லபத் தேவர் யார் ?

முத்துவடுகநாதத் தேவர் உடன் பங்காளி மைந்தர் வாரிசு



21) வேங்கை பெரிய உடையனத் தேவர்  மறைந்த ஆண்டு  ?

     19-09-1802 







தென்காசிப் பாண்டியர்கள் ( மறவர் )

தென்காசிப் பாண்டியர்கள் ( மறவர் )
தென்காசியை தலைநகராக்கி அங்கேயே முடிசூட்டிக்கொண்ட முதல் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். தன்னால் தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்றும் நாளை இக்கோயில் இடிந்து விழும் என கணிக்கப்பட்டதாலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதை மீட்க உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்டார். அதன்படி இங்கு வரும் பக்தர்கள் அனைவரின் காணிக்கையையும் ஏற்று அவர்களின் பாதம் பற்றி வணங்குவேன் என்று தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை உலகம்மன் கோயிலின் வாசலிலேயே பதித்துக் கொண்டார்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்து பாண்டியரும் தென்காசியையே தலைநகராக கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக்கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.

மகாராஜா திரு. T.N.S. தீர்த்தபதி

தென்னாட்டு புலி
சிங்கம்பட்டி சமஸ்தான
மகாராஜா திரு. T.N.S. தீர்த்தபதி

சிவகங்கை மாமன்னர் உடையனத் தேவர்

சிவகங்கை சீமையின் முதல் கல்லூரி தென்மாவட்டங்களிலேயே மதுரைக்கு அடுத்ததாக தொடங்கப்பட்டது இங்குதான் தனது மக்களுக்காக இலவச கல்வி கொடுத்த கல்வி தந்தை
மாமன்னர் உடையனத் தேவர்
சிவகங்கை மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்த சுமார் 160 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மன்னர் உடையண மகராஜா அவர்களால் கட்டப்பட்ட மன்னர் மேனிலைப்பள்ளி.இப்பள்ளியில் படித்து பயனடைந்து இன்று புகழ்பெற்ற அமைச்சர்களாகவும்,மாவட்ட ஆட்சியாளராகவும்,நீதிபதிகளாகவும்,தொழில்அதிபர்களாகவும்,இன்னும் எண்ணற்ற துறைகளில் சிறந்து விளங்கிவருகின்றனர்.இப்படிபட்ட பள்ளியை உருவாக்கிதந்த மன்னர் உடையனமகராஜாவை எத்தனைபேருக்கு தெரியும்.
சிவகங்கையில் பல கோயில்கள் கட்டிய பெருமை இவரையே சேரும்.
வாழ்க உடையண மகராஜா புகழ்!
வளர்க உடையண மகராஜா புகழ்!

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர்

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் 

வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்திய சுதந்திர வரலாற்றில் முதன்முதலில்
போரில் வீரமரணம் அடைந்தவர் அதே போல் போரில் தோற்கடிக்கப்படாத இந்திய மன்னரும்
இவரே வெற்றி அல்லது வீரமரணம் என்று வாழ்ந்தவர்தான் வீரப்பேரரசர்
முத்துவடுகநாதத் தேவர்




வீரப்பேரரசர் முத்துவடுகநாதத் தேவர் பற்றிய சில வரலாற்று துளிகள்


சிவகங்கை சீமையின் இரண்டாவது அரசராக 14-5-1750 அன்று முத்துவடுகநாதத் தேவர் முடிசூட்டப்பட்டார்.
முடிசூட்டப்பட்ட காலந்தொட்டு தம் நாட்டை மேன்மைப்படுத்துவதில் மிகுந்த கவணம் செலுத்தினார்.
தந்திரி தாண்டவராயன் பிள்ளையை பிரதானியாகவும் ஆலோசகராகவும் வைத்துக் கொண்டு ஆற்றல்மிகு அரசு புரிந்தார்.
சீமை எங்கும் செழிப்புற பல ஏரிகள்,குளங்கள், ஆற்றுக்கால்கள் அமைத்தார்.
ஆலங்யங்கள் பல கட்டினார் அவற்றில் முக்கியமானவை :
1) சேத்தூர் சந்திரசேகரர் கோவில்
2) காளையார்கோவில் சோமேஸ்வரர் கோவில்
3) காளையார்கோவில் பிரகார மண்டபம்
4) பட்டபங்கலம் அழகு சௌந்தரநாயகி அம்மன் கோவில்
5) திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
6) வடவன்பட்டி ஈஸ்வரன் கோவில்
7) பிரான்மலை பிடாரி அம்மன் கோவில்
8) பாகனேரி பில்வநாயகி அம்மன் கோவில்
9) சிவகங்கை சசிவர்ணேஸ்வரர் ஆலயம்
10) சிவகங்கை அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பித்தார்
மேலும் பல திருப்பணிகள் செய்தார்

மாமன்னர் வேங்கை பெரிய உடையனத் தேவர்

மாமன்னர் வேங்கை பெரிய உடையனத் தேவர்

மாமன்னர் புலித்தேவன் சிறு குறிப்பு

மாமன்னர் புலித்தேவன் சிறு குறிப்பு





   



மதுரையில் பூலித்தேவரின் நினைவு சின்னங்கள்

மதுரையில் பூலித்தேவரின் நினைவு சின்னங்கள் :-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த மதுரை அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு காக்கா தோப்பு அரண்மனையும், தக்க சண்மானமும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியைவேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.
புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார்.
அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், காக்கா தோப்பு அரண்மனை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசலும், காக்கா தோப்பு அரண்மனையும் பூலித்தேவர் பெயர் சொல்லும் இடங்கள் - இனி அந்த இடங்களுக்கு போகும் போது நிச்சயம் பூலித்தேவர் நினைவு உங்களுக்கு வரும்...

-க.சந்தண கிருஷ்ணன்