மாமன்னர் பூலித்தேவர் வெற்றி கண்ட போர்கள்
1.இராபர்ட்கிளைவ் போர் _திருச்சி _1750,
2.மாபூஸ்கான் போர் _களக்காடு_1755,
3.ஹெரான் போர் _நெற்கட்டான்செவல்_1755,
4.களக்காடு போர்_1755,
5.திருவில்லிபுத்தூர் போர்_1756,
6.திருநெல்வேலி போர்_1756,
7.கான்சாகிபு போர்_ஆழ்வார்குறிச்சி_1757,
8.கான்சாகிபு போர்_ நெற்கட்டான்செவல_ 1759,
9.கான்சாகிபு போர்_ வாசுதேவநல்லூர் _1759,
10.கான்சாகிபு போர் _வாசுதேவநல்லூர்_1760,
11.கான்சாகிபு போர்_ வாசுதேவநல்லூர்_1761.
12.டெனால்டு காம்பல் போர்_ வாசுதேவநல்லூர்_ 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவநல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர்.அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர்.ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார்.தப்பி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மறைந்து கொண்டார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.
தொடர்ந்து 17ஆண்டுகளுக்கு மேல் போர் புரிந்த மாவீரர் பூலித்தேவர்
மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

No comments:
Post a Comment