ராணி வேலுநாச்சியார் விருப்பாச்சி அரண்மனையில் தங்கியிருந்த பொழுது அங்கு நடக்கும் போர்பயிற்சி களத்தை பார்வையிடும் வழக்கம் உண்டு ஒருமுறை பார்வையிடச்சென்ற பொழுது ஹைதர் அலியின் படைத்தளபதி ராணியைப்பார்த்து ஒரு பெண்ணாக இருந்து கொண்டு சண்டையிட்ட முடியுமா என்ற கேட்ட பொழுது சிறிதும் அசராமல் அங்கிருந்த வாளை கொடுத்து நீங்கள் வீரமறவனாக இருந்தால் என்னிடம் சண்டையிட்டு வெல்லுங்கள் என்று கூறினார்.நீங்கள் வாளை வலது கையிலே பிடித்துக்கொள்ளுங்கள்,நான் எனது இடது கையிலே பிடித்துக்கொண்டு சண்டையிடுகிறேன் முடிந்தால் இந்த வீரமறத்தியை வென்றுகாட்டுங்கள் என்று கூறி சண்டையிடுகிறார்.கனநேரத்தில ் படைத்தளபதியை வீழ்த்தி கழுத்தில் வாளை வைத்தார்.அதிர்ந்து போன படைத்தளபதி மன்னித்துவிடுங்கள் அன்னையை எனக் கூறினார்.இதைப்பார்த்து வியர்ந்து போன ஹைதர் அலி வேலுநாச்சியாருக்கு போரிட 5000 படைவீரர்கள் தருவதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment