கடம்பூர் ஜமீன்-பூலோக பாண்டியன்
பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் மகனான (முதலாம் புக்கரின் மகன்) குமார கம்பணாவை மதுரையை கைப்பற்றுமாறு அனுப்பி வைத்தார். 1371 ல் திருச்சியை கைப்பற்றிய குமார கம்பணன் மதுரையையும் கைப்பற்றி விஜய நகர பேரரசின் ஆட்சியை மதுரையில் நிறுவினார்கள்.
இவ்வாறு தமிழகத்தில் ஆட்சி நடத்திய விஜய நகர பேரரசை தோப்ப10ர் 1616 போருக்கு பின்னால் தனது வலிமையை இழக்கத் தொடங்கியது. ஏற்கனவே விஜய நகர பேரரசின் கீழ் பணிபுரிந்த நாயக்கர்கள் மதுரையை தங்களின் சுதந்திர அரசாக அறிவித்தன. இதனைத் தொடாந்து தஞ்சை, செஞ்சி, ஆகிய நாயக்க அரசுகள் தோன்றின.
ஜமீன்தாரி முறை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. 1801ல் கர்நாடக ஒப்பந்தத்தின் படி தென்தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கைவசம் ஆயிற்று. அதுவரை இருந்த பாளையஙகள் அனைத்தும் 1802 ல் ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது.அதன்படி கடம்பூர் ஜமீன் உருவானது. கடம்பூர் ஜமீன் திருநெல்வேலி பாளையங்களில் ஒன்றாகும். இதன் தோற்றம் வளர்ச்சி மற்றும் சமயத் தொண்டுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கடம்பூர் பெயர் வரக்காரணம் :
இப்பகுதியில் நிறைய கடம்ப(கதம்ப) மரங்கள் அதிகமாக இருந்ததால் இது கடம்பூர் என பெயர் வந்தது.இதன் ஜமீண்தார் சீனீ வல்லாள சொக்கர் தலைவர் என்ற பூலோக பாண்டியன் :. இவர் ஆப்ப நாடு நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவரை சொக்கர் தலைவர் என்றும் கூறுவர். பின்பு இதுவே பதினெட்டு பட்டிக்குத் தலைநகராக விளங்கியது இவ்வாறு ஜமீன் குடும்பத்தார் வருகை
“பதினெட்டு நற்பதியைப் கொண்ட
பலவளம் நிறைந்த நாட்டை
அதிபதியாய் ஆளப் பெற்றார்
ஆப்ப நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்”
ஆதியில் இராமநாட்டைச் சேர்ந்த ஆப்ப நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வந்து வாழத் தொடங்கினர். பாண்டிய நாட்டின் பகுதிகளில் ஒன்று கடம்பூர் இதன் அருகாமையில் உள்ளது. அவர்களில் ஒருவர் சீனி வல்லாளர் சொக்கர்தலைவர் (அ)பூலோக பாண்டியன். இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது. இவர்கள் மறவர் இனத்தில் தலைவனார் என்ற வம்சத்தைச் சார்ந்தவர்கள்.
ஜமீன் தோற்றம் :
கடம்பூர் ஜமீன் ஜமீன் 14 ம் நூற்றாண்டில் 1227 ல் கொல்லம் ஆண்டு 382 ல் ஜமீன் தோன்றியது.
கடம்பூர் ஜமீன் உருவாகக் காரணம் என்னவென்றால் இப்பகுதியில் கொள்ளையர் கூட்டம் அதிகமாக இருந்ததால் அது அப்பகுதியில் உள்ள மக்களை அச்சுறுத்தி வந்தனர். இந்தப் கொள்ளையரைஅடக்க முடியாமல் மக்கள் அல்லல் பட்டார்கள். பாரதத்தின் வடக்கேயுள்ள காசி வடகாசி, தென்பகுதியில் உள்ள காசி தென்காசி, இந்த தென்காசியை மையமாக (தலைநகராக) வைத்து ஆட்சி செய்து வந்தவர் வரகுனராம பாண்டிய மன்னர். இவரும் கொள்ளையரின் செயலை அறிந்திருந்தார். எனவே இவர் தமது படை தலைவர்களில் ஒருவராக வாழ்ந்த சீனி வல்லாளர் சொக்கர் தலைவர் என்பவரை அனுப்பி கொள்ளையரை அடக்குமாறு ஆனையிட்டார். எனவே சொக்கத்தலைவரும் வீரத்துடன் கொள்ளையரை அடக்கி அவர்களை அப்பகுதியிலிருந்து ஒழித்தழித்தார்.இதனால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள் அப்பகுதி மக்கள். இச்செய்தி காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியது. அப்போது கடம்பூர் உட்பட தென்காசியைத் தலைநகராக வைத்து ஆட்சி செய்து வந்த வரகுனராமபாண்டிய மன்னர் சீனி வல்லாளர் சொக்கர் தலைவரின் வீரத்தை அறிந்து, சந்திரன் என்ற பூலோக பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் வழங்கி 18 ஊர்களுக்கு ‘திசை காவலாக’ நியமித்து, செப்புப் பட்டயம் வழங்கினார். இதன் தலைநகராக கடம்பூர் இருந்தது. இவ்வாறு கடம்பூர் ஜமீன் உருவானது.
பட்டம் சூட்டும் முறை :
கடம்பூர் ஜமீனில் ஜமீன் இருக்கும் காலத்தில் தனது ஆட்சி முடிந்தவுடன் யார் மன்னராக வர வேண்டும் என்று மன்னர் யாரை கூறுகின்றாரோ அவரே மன்னராக பொறுப்பேற்க முடியும். மன்னர் யாரை வாரிசாக நியமிக்கின்றாரோ, அவர்தான் மன்னராக வரமுடியும். மன்னராகத் தேர்ந்தெடுக்க்பட்டவருக்கு ஒரு பிராமணர்தான் முடிசூட்டுவார். மன்னராக பொறுப்பேற்றவுடன் அவர் சில கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதாவது இறந்த உடலை பார்க்க கூடாதென்றும், கண் தெரியாதவர்களைப் பார்க்கக் கூடாது என்றும் இருந்தது. மேலும் மன்னருக்கு உரியதான தண்டிகை, மேளா, பல்லக்கு இதை மன்னர் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், மற்றவர் எவரும் பயன்படுத்தக்கூடாதென்றும் நடைமுறை இருந்தது.
ஜமீனின் முக்கிய நிகழ்வுகள்:
பாண்டியருக்கு பின் இப்பகுதி பாளையமாக ஆக்கபட்டுள்ளது. இதன் பின் ஆங்கிலேயர் காலத்தில் இது ஜமீந்தாரியாக உள்ளது.இதன் முக்கிய நிகழ்வுகளாக சிவகாசி கொள்ளை சம்பவம் என்ற 1920 கொள்ளையர் கூட்டத்தினர் கடம்பூர் பகுதியில் தங்கள் கைவரிசையை காட்ட முனைந்த போது இந்த பகுதி மக்களால் வெட்டபட்டு இறந்தனர்.கொள்ளையர்களை விரட்ட ஆன்மக்களோடு பெண்களும் ஆயுதம் ஏந்திய நிகழ்வுகள் இங்கு பரிச்சயமாக உள்ளது.இரண்டாம் உலகபோரின் போது அங்கிலேயர்கள் பயன்படுத்திய விமான தளம் ஒன்று இங்கு உள்ளது.இந்த ஜமீனை சார்ந்தவர்கள் பொதுமக்களும் பயன்படுத்தும் வன்னம் ஒரு பழத்தோட்டம் உருவாக்கியுள்ளனர்.இந்த தோட்டத்தில் மக்கள் எந்த நேரத்திலும் வந்து பழம் பரித்து செல்லலாம் என அனுமது உள்ளது.இவ்வாறு கடம்பூர் ஜமீன் வீரத்திலும் கொடையிலும் சிறந்து விளங்கியதை காட்டுகிறது.ஆன்மீகத்திலும் பெருநாட்டமுள்ள ஜமீனிடம் நிறைய தேவஸ்தான சிவாலயங்களும் ஜமீனுக்கு பாத்தியமாக உள்ளது.
ஜமீண்களுடன் தொடர்பு:
கடம்பூர் மன்னர்கள் தனது பகுதிகளில் முக்கிய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் சிங்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, கங்கைக் கொண்டான்,தலைவன் கோட்டை ஆகிய ஜமீனின் இல்ல விழாக்கள், அந்த பகுதி திருவிழாக்களிலும் ஜமீன்தார் கலந்துக் கொண்டனர். சொக்கம் பட்டி ஜமீனுடன் நல்லுறவு வைத்திருந்தன.
முடிவுரை:
கடம்பூர் குறுநில மன்னரின் வாரிசாக 50 வயதுடைய சதீஸ் ராஜா என்ற பூலோக பாண்டியன் அவர்களது புதல்வர்களும் கடம்பூர் இன்றும் வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.மரங்களும் மலை வளமும் நில வளமும் பெற்ற பழமையான ஊர் கடம்பூர். இவ்வாறு சிறப்பு வாய்ந்த வரலாற்றைத் தந்த கடம்பூர். இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. பல நூற்றாண்டுகளாக வெளிவராத இது போன்ற வரலாற்று உண்மைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் உள்ளது.
No comments:
Post a Comment