Monday, 24 August 2015

சேத்துர் ஜமீன்

சேத்துர் ஜமீன்


முன்னுரை:
14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ஆளுநராக இருந்த ஜலாலூதீன் ஆசான் ஷா 1335ல் தன்னை சுல்தானியத்திலிருந்து விடுவித்துக் கொண்டு மதுரை சுல்தனாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவ்வாறு தோன்றிய மதுரை சுல்தானியர்கள் இங்குள்ள இந்துக்களை கொடுமைப்படுத்தியும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டதால் மக்கள் சொல்லாத துன்பத்திற்கு ஆளானார்கள். தாங்களை இந்த துன்பத்திலிருந்து விடுவிப்பதற்கு தகுந்த நேரத்தையும் மீட்பவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் விஜய நகர பேரரசின் அரசரின் மகனான (முதலாம் புக்கரின் மகன்) குமார கம்பணாவை மதுரையை கைப்பற்றுமாறு அனுப்பி வைத்தார். 1371 ல் திருச்சியை கைப்பற்றிய குமார கம்பணன் மதுரையையும் கைப்பற்றி விஜய நகர பேரரசின் ஆட்சியை மதுரையில் நிறுவினார்கள்.
இவ்வாறு தமிழகத்தில் ஆட்சி நடத்திய விஜய நகர பேரரசை தோப்ப10ர் 1616 போருக்கு பின்னால் தனது வலிமையை இழக்கத் தொடங்கியது. ஏற்கனவே விஜய நகர பேரரசின் கீழ் பணிபுரிந்த நாயக்கர்கள் மதுரையை தங்களின் சுதந்திர அரசாக அறிவித்தன. இதனைத் தொடாந்து தஞ்சை, செஞ்சி, ஆகிய நாயக்க அரசுகள் தோன்றின.
ஜமீன்தாரி முறை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. 1801ல் கர்நாடக ஒப்பந்தத்தின் படி தென்தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கைவசம் ஆயிற்று. அதுவரை இருந்த பாளையஙகள் அனைத்தும் 1802 ல் ஜமீன்தாரி முறையாக மாற்றப்பட்டது. அதன்படி சேத்துர் ஜமீன் உருவானது. சேத்துர் ஜமீன் திருநெல்வேலி பாளையங்களில் ஒன்றாகும். இதன் தோற்றம் வளர்ச்சி, நிர்வாக முறை மற்றும் சமயத் தொண்டுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தோற்றம்:
சேத்துர் ஜமீந்தார் "வடமலை திருவொனாத சேவுக பாண்டிய தேவர்" என்கிற பட்டம் உடையவர். இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய மன்னர் வம்சமாகும். இவர்கள் மூதாதையர்கள் காஞ்சியை ஆண்ட வீர சோழனிடம் பொக்கிஷதாராக இருந்தவர்கள். இவர்களை "மன்னிய குருகுல வணங்காமுடி பண்டாரத்தார்" என்று அழைத்தார்கள். இவர்கள் பண்டாற மறவர் என்ற "வணங்காமுடி பண்டார மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள். பின்பு அங்கு இருந்து பெயர்ந்து சோழ நாட்டை அடைந்தனர். பின்பு குழோத்துங்க சோழனிடம் தளபதிகளை வேலை செய்தனை. அப்போதைய தலைவர்கள் வாண்டையாத்தேவரும் கலிங்குராயதேவரும் ஆவார். பின்பு அரசியல் காழ்புனர்ச்சி காரனமாக அங்கு இருந்து நீங்கி தல யாத்திரையாக மதுரையை அடைந்தனர். அப்போது பாண்டிய ராஜாவாக இருந்த பரக்கிரம பண்டியன் இவர்கலை ஆதரிது தம் படையில் தளபதிகளாக நியமிது கொண்டான். அப்போது யாரலும் அடக்க முடியாத மன்னனின் யானையை அடக்கியதர்க்காக மதுரைக்கு மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள் "வாலந்தூர்" என்ற ஊரினை பரிசளித்தான் பான்டிய மண்ணன். அப்போது தம் உறவினர்களை அழைத்து வந்து வாலந்தூரிலே குடியேற்றினர்.அப்போது பாண்டிய மன்னனுக்கு எதிராக கிளம்பிய பந்தளமன்னனனை அடக்க இவர்கள் தலைவனான் சின்னய்ய தேவர் பாண்டிய படையுடன் சேர நாட்டு பந்தள எல்லை வரை விரட்டியடித்து அங்கு கோட்டை ஒன்றை கட்டி பந்தள மன்னனான திருவொனாத நாயர் தேசிகர் திரும்பாமல் காவல் செய்த்தார். பாண்டிய மன்னன் இவர்கள் வீரத்தை பாராட்டி "திருவொனாத சேவுக பாண்டிய தேவர்" என்ற பட்டம் தந்து சேத்துர் பகுதிக்கு தலை காவலானக மன்னனக முடிசூட்டினான். இவர்கள் "விக்கிரம" சோழ மரபினர் என்று சேத்துர் வம்சாவளி கூறுவதாக ர.வடிவேல் "தென் இந்திய அரச பரம்பரை" என்ற் நூலில் கூறி இருந்தார். இப்பளையம் தோன்றிய ஆண்டு 1284. இவரும் சிவகிரி பாளயக்கரரும் சம காலத்தவர். இது சோற்றுர் என அழைக்கபட்ட விளைநிலமுள்ள பூமியாகும். அதன் பின்பு சேத்துர் பளையத்தை 48 பளையத்தார்கள் வரை ஆண்டுள்ள்ணர். இவரது ஆட்சி பகுதி சேரநாட்டின் எல்லையான் மேற்க்கு தொடர்ச்சி மலையில் ராஜாபளையம் பகுதியில் உள்ளது. கொல்லம்கோண்டான் மற்றும் கங்கைகொண்டான் பளையக்காரர்கள் இப்பிரிவினை சார்ந்த்வ்ர்கள்.
சபரிமலை ஐயப்பன் கதையில் பந்தளநாட்டு எதிர்புற பாண்டிய நாட்டு ராஜாவாக வரும் மறவர் தலைவர் இவரே. சேத்துருக்கும் பந்தளத்திற்கும் அடிக்கடி எல்லை போர்கள் நடக்கும் பந்தள பகுதியிடம் நிறய பகுதிகளை வென்றுள்ளார்.

இவர்கள் வணங்கும் தெய்வம் நச்சடையப்பன். இது சேர மன்னனின் குல தெய்வம் இந்த கோயிலை கட்டியது சேர மன்னன் விருத்தங்கல் கோயில் கல்வெட்டில் விளங்குகின்றன. இத்தெய்வத்திற்குத் திருப்பனி செய்து திருவிழக்கொண்டாடி வரும்படியாக சேர மன்னர்களால் ஏற்றுக்கொள்ளபட்ட குறுநில மன்னர்கள் இவர்கள் முன்னோர்கள். இது பற்றிய தெய்வ திருப்பனியில் தெய்வீக திருப்பனியின் நிமித்தம் இன்னவர்கள் என்பதை சேவுக பாண்டிய தேவர் என் குல பெயராக கொண்கிருக்கிறார்கள்.

நச்சாடையப்பன்(நச்சாடை தவிர்த்த ஈஸ்வரன்) கோயில்:
ஒரு சமயம் பந்தள மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்ட போரில் பண்டியனை கொல்வதற்கு நச்சடை கொண்டு முயன்றவர்களை சிவன் அடையாளம் காட்டினாராம். ஆனால் இதை சேத்துர் அரசர் அந்த மன்னன் தம் மூதாதயரான "சின்னயா சேவுக பாண்டிய தேவர்" தான் எனவும் அவர் காலத்தில் பந்தள்த்துடன் உண்டான் சண்டையில் பரமேஸ்வ்ரனே நேரில் தோன்ற் காப்பற்றிய்தாக கூறுகிறார்.இது ப்ரசித்தி பெற்ற் 140 சிவாலயங்களில் ஒன்ற் இது மேற்கு தொடர்சிமலையில் உள்ளது

பாளயபட்டுகள்லுடனான போர்களும் நிகழ்வுகளும்:

சேற்றூரரும்(வ்டமலையர்) சிவகிரியாரும்(தென்மலையர்) பரம் வைரிகளகும். இவ்விவிருவரும் வடரை,தென்கரை என் மறவர் தலைவருள் மோதிகொள்வது வழக்கமாகும்.17-ஆம் நூற்றண்டில் வடகரை ஜமீனுடன் சேர்ந்து தென்மலை(சிவகிரி ) மற்றும் ஊற்ற்மலையாரயும் போரில் கொன்றனர். இத்ற்கு வடகரை ஆதிக்கம் என பெயர்.ஆனல்1792-ல் சிவகிரி சேத்துரின் மீது படையெடுத்து அதன் தலைவரைகொன்று தனது உறவினரை அமர்த்தினார். சிவகிரி வன்னியனாரும் வன்னிய மறவர் தலைவர் என்பது குறிப்பிட தக்கது.

சேத்துர் ஜமீன் 1754-64. அம் ஆண்டு வரை பூலிதேவருடன் இனைந்து விடுதலை போரில் பங்கு பெற்று 1803 ஆம் ஆண்டு அடக்கபட்டு ஆங்கிலயரால் ஜமீன் ஆனது.

20- ஆம் நூற்றண்டில் சேத்துர்:

1945 காலத்தில் இருந்தவர் ராஜா ராம சேவுக பாண்டிய தேவர் ஆவார்.. இவர் அருனசல கவிராயர்,கந்தசாமி கவிராயர் வித்வான் மாமூண்டியா பிள்ளை முதலிய பல கலைஞர்களை ஆதரித்தவர். இவர் சிறந்த சேவல் சண்டை பிரியர் ஆதலல் "சேவல் துரை" என அழைக்கபட்டார். ஆங்கில அரசால் "ராஜா" மற்றும் "ஹைனஸ்" என பாராட்ட பெற்றார். பாசவலை என்னும் திரைகாவியத்தை தொடங்கிய பின்பு தொடரமுடியாத சூழ்நிலை உண்டனது. இவரும் தனது பரம வைரியான சிவகிரியாரும் தற்போது உறவினர்களாவர் பென் கொடுத்து பென் எடுத்துள்ளனர்.பண்டுக கலவரத்தின் போது முடிவில் பிரான்மலை கள்ளர்களுக்கும் புது நாட்டு இடையர்களுக்கும் சமாதானம் சேவுக பாண்டியர் அரன்மனையில் நடந்தது. அப்போது கள்ளர்களும் இடையர்களுக்கும் அவர் அவர் வரலாறு சேத்துர் அரன்மனையில் வாசிக்க பட்டது


நச்சடையப்பன் திருவிழா:
இது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவதானம் என்ற இடத்தில் உள்ளாது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருத்தேரொட்டம் மிக விமரிசையாக பல லட்சம் செலவில் நடைபெறுகிறது.


நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் கிராம ஆட்சி முறைக்கு சிறு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் பின் 19 ம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் ஆங்கிலேயர் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கப்படுத்துவதற்காக 1830 க்கு பின்னால் தொடர்ச்சியாக பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன் சுதந்திரத்திற்குப் பின்னால் காந்தியடிகள் கிராம ராஜ்ஜியத்தை ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த கனவு கண்டார். அவருடைய கனவை நனவாக்கும் முகமாக பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டு திரு. பீ.வி நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கிராம ராஜியம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு தான் தலைவன் கோட்டையிலும் பஞ்சாயத்து முறை அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுபிரிவாக உள்ளது. இப்போதைய பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் திரு.கோ.ப10சைப் பாண்டியன் ஆவார்.
ஊராட்சி நிர்வாகம்:
கிராம சபை:
இந்திய அரசியலமைப்பு 72 வது திருத்த சட்டத்தின் படி கிராம ஊராட்சிகளில் கிராம சபை அமைக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. 1994ம் வருட தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 3 ன் படி கிராம ஊராட்சி வாக்காளர் பட்டியலிலுள்ள மொத்த வாக்களர்களையும் உள்ளடக்கிய அமைப்பு கிராம சபையாக செயல்படுகிறது.
சபையின் செயல்பாடு:
கிராம சபையினை ஊராட்சி மன்ற தலைவர் கூட்டி, தலைமையேற்று நடத்தி வருகிறார். ஊராட்சி மன்றத் தலைவர் இல்லாத சூழ்நிலையில் துணைத்தலைவரும், இவ்விருவரும் இல்லாத சூழ்நிலையில் மற்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் மூத்த உறுப்பினர் தலைமை ஏற்று கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது அரசு விதி.
கிராம சபை கூட்ட நாட்கள்:
அரசாணையின் படி கிராம சபை கூட்டம் ஓராண்டில் குறைந்த பட்சம் நான்கு முறை நடத்தப்பட வேண்டும். இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க
மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், தேவர் ஜெயந்தி மற்றும் நமது தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள் ஆகிய ஐந்து நாட்களில் தவறாத கிராம சபை கூட்டப்படுகிறது.
மேலும் இரு கிராம சபைக் கூட்டங்களுக்கிடையே ஆறு மாதத்திற்கு மேல் கால இடைவெளி கூடாது ஊராட்சி மன்றத்தலைவர் ஏதேனும் ஒரு காரணத்தால் கிராம சபையைக் கூட்ட தவறினால் ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் வேண்டும்.
முக்கியத்துவம்:
கிராம சபையானது கிராம மக்களின் முக்கிய கருத்தை வெளியிட வாய்ப்பளிக்கும் அரங்கமாக செயல்பட்டு வருகிறது. கிராம சபை மூலம் கிராம மக்கள் அனைவரும் நேரடியாக கிராம நிர்வாகத்தை நடத்த வாய்ப்பு உள்ளது. கிராம ஊராட்சி மன்றத்தின் செயல்பாடுகள், வரவு செலவுகள் மற்றம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பாடுகள் கண்காணிக்கும் ஒரு அமைப்பாக கிராம சபை செயல்படுகிறது. இக்கிராம சபைக் கூட்டத்தின் மூலம் திட்டச் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை விவாதித்து அக்குறைபாடுகளைக் களைந்து அத்திட்டத்தின் முழுப்பயனும் மக்களுக்கு கிடைக்கச் செய்கிறது.

No comments:

Post a Comment