Monday, 24 August 2015

கொண்டயங்க்கோட்டை மறவர்-பெயர்க்காரனம்

கொண்டயங்க்கோட்டை மறவர்-பெயர்க்காரனம்



மறவரில் 38 பிரிவுகள் உண்டு.அவற்றில் ஒன்று கொண்டயங்க்கோட்டயார்.கொண்டயங்க்கோட்டை என்ற கோட்டை எங்கு உள்ளது என்று தமிழ்நாட்டில் தேடிப்பார்த்தால் அப்படி ஒரு கோட்டை எங்கும் இல்லை என்றே பதில் வரும் அப்போது கொண்டயங்க்கோட்டை என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?.இது சங்க இலக்கியத்தில் மறவர்கள் போருக்கும் ஆநிரை கவர்வதற்க்கும் வெவ்வேறு பூக்களை சூடுவர்.அதாவது வெட்சி பூ,கரந்தைப் பூ,தும்பை பூ,வாகை பூ என சூடுவதாக சங்க இலக்கியங்கள் கூறுகிறது.இவற்றை கொண்டையில் சூடுவதால் கொண்டைகட்டி மறவர் என பெயர் வந்தது.கொண்டையில் ஒருவகை ஊசி கோட்டானியை அனிந்து கொள்வர்.இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதிக்கோட்டை,தென்னவராயங்கோட்டை,சுந்தரவல்லவன் கோட்டை,இராசகம்பீர கோட்டை ,அரிதானிக்கோட்டை,அனிலேஏராக்கோட்டை என்ற பெயரில் பல கோட்டை உண்டு.
திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது.......வெங்கல ராச வடுக படை.....
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை...
...பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.

undefined
தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு
"கொண்டை வைத்தவன் மறவன்.
கோ வைத்தவன் இடையன்"
.


தமிழக ஜாதிகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பல்வேறு மாதிரி கொண்டை அனிவது வழக்கம் முதலி கொண்டை,சேர்வை கொண்டை,அம்பலக்காரன் வலக்கொண்டை,முன் குடுமி பிராமனன் போல பல சமூகத்தவர் பல்வேறு கொண்டை அனிவது வழக்கம்.


இது போலத்தான் கொண்டைகட்டிகோட்டானி அனிந்து போர்வீரர்களாக வாழ்ந்த மறவர்கள் கோட்டையில் பனியாற்றியதால் அவர்கள் நாளடைவில் "கொண்டங்க்கோட்டை மறவர்" என பெயர் வந்தது.

சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் சீமையில் இக் கொண்டையங்கோட்டைத் தளபதிகள் பல சிறப்புச் சலுகைகளை அனுபவித்து வந்ததை அறிய முடிகிறது .

மறவர்கள் குழக்களாக வாழ்ந்தனர். மறவர் கிராமங்கள் கோட்டைச் சுவர்களுடன் இருந்தன. கிராமத்தலைவர்கள் கிராமத்தைப் பாதுகாக்க வலுவான ஒரு படை வைத்திருந்தனர். கிராமத் தலைவர்கள் முழு சுயாட்சி அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் தேவைப்படும் சமயங்களில் மன்னருக்கு ராணுவச்சேவை செய்தனர். பாண்டிய மன்னர்களின் பலமே இம் மறவர் தலைவர்கள் அளித்த ஆதரவில்தான் அடங்கியிருந்தது. கிறிஸ்தவ ஆதாரங்களும் 'குலவம்சம்' கூறியவற்றை உறுதிப்படுத்துகின்றன.
பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் விஜயநகர தளபதி விட்டலராயன்(வெங்கலராஜன்) படையே எதிர்த்து போரிட்டு மடிந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர்களின் கல்வெட்டு செய்திகள் தமிழக அரசு தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது. அது அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது.
undefined
திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான் பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தெண் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இந்த போரில் விஜய நகர தளபதி தோற்றான் எனவே கூறலாம்.கன்னடிய தளபதி விட்டலராயனுக்கும் வெங்கல ராஜனுக்கும் இடையே நடந்த போர் பற்றிய கல்வெட்டு கயத்தார் 'இளவேலங்கால் கல்வெட்டு' குதிரையுடன் ஒருவனும் காலாட்படையுடன் ஒருவனும் சண்டையிடுவதாக சிற்பம் ஒன்று உள்ளது. இதுவே சாட்ச்சியாகும்.
undefined
போரில் வடுக படையை எதிர்த்து போரிட்ட வீர மறவர்கள் ஆயிரக்கணகானோர் இறந்தனர். இதில் தளபதிகளான பத்து கொண்டையங்கோட்டை மறவர்களுக்கு பாண்டியன் நடுகள் எடுத்துள்ளான்.
இந்த கொண்டையங்கோட்டை மறவர்களுடன் பாண்டிய மன்னனின் பெயரும் அவனது வம்சப்பெயரும் தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது.

இந்த  கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு:
300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன்
வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்"
301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்"
302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்"
303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் "
304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள்
இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்"

305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்"
306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்"
307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்"
308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"பெயர் தெரியவில்லை"
309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்
"குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் வெங்கலாராஜ வடுக போரில் பட்டான்"

undefined

இவை அனைத்தும் அரசால் முறையாக பதிவு செய்யபட்டுள்ளது. அந்த நடுகற்களும் பாளையங்கோட்டை அருங்காட்ச்சியகத்தில் உள்ளது. தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது
மதுரை பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகும் சேதுபதிகளின் முந்தைய மேலாதிக்கம் தொடர்ந்தது. மதுரை நாயக்க மன்னர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரும் கூட, முந்தைய பாண்டிய அரசின் அரசுரிமை பெற்ற மறவர் சீமையின் வாரிசுதாரர்களாக அவர்களை ஏற்றுக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதுபதிகளின் ஆட்சியின் கீழ் மறவர் கிராமங்கள் முழுமையும் மறவர் தலைவர்களுக்கே சொந்தமாக இருந்தன. சேதுபதி மன்னர் கேட்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களை அக் கிராமங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருந்தது.

ஒவ்வொரு மறவரும் போர் வீரராகவே இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலங்களில் பாடுபட்டனர். இந்த வீரர்கள் தங்கள் கிராமத்தில் காவலர்களாக இருந்தனர். தலைவர்களின் போர்க்காலங்களில் பங்கேற்றும் கோட்டைகளைக் காத்தும் தங்கள் தலைவருக்கு ஆதரவாகப் போரில் உதவினர்.

மறவர்கள் முதலாவதாகத் தங்களின் கிராமத் தலைவருக்கே கட்டுப்பட்டவராக இருந்தனர். அவரே அவர்களைப் பாதுகாப்பவராகவும் ஆள்பவராகவும் இருந்தார். அச் சமூக முழுமையின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக சேதுபதி, மறவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார்.எனவேதான் மிகக் குறுகிய கால அவகாசத்தில் கூட முப்பதாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்களைச் சேதுபதியால் திரட்ட முடிந்தது.

thank to sembiyan arasan

No comments:

Post a Comment